முகப்பு சினிமா  நடிகர் ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

நடிகர் ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 2019- 2020 ஆண்டுக்கான சொத்து வரி கடந்த பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரானா தொற்று காரணமாக திருமணம் மண்டபம் செயல்படாத காலகட்டமான ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்கான அரையாண்டு சொத்து வரியாக 6,50,000 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர்10-ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் 2 சதவீத வட்டியை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் மாதம் முதல் திருமண மண்டபம் செயல்படாமல் இருந்ததை ரஜினிகாந்த் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

பேரிடர் காலத்தில் செயல்படாமல் இருந்த திருமண மண்டபத்திற்கு முழு வரி வசூலிப்பது சென்னை மாநகராட்சி விதிகளுக்கு எதிரானது என்பதால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மாநகராட்சியின் நோட்டீசுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி பதிலளித்துவிட்டு உடனடியாக நீதிமன்றத்தை அவசரகதியில் அனுகியது ஏன்? என ரஜினிகாந்த் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் இது போன்று மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரித்ததைத் தொடர்ந்து தனது மனுவை வாபஸ் பெற்று கொள்வதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments