முகப்புஅரசியல்மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 8-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 8-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்  குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

8-ம் கட்ட ஊரங்கு செப்டம்பர் 30 ம் தேதி பல்வேறு தளர்வுகளுடன்  அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பொதுபோக்குவரத்து,  கடைகள் திறப்பு இரவு 8 மணி வரை கூடுதல் நேரம் என பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது.

இந்த சூழலில் கடலூர், கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில்  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள்  எடுப்பது குறித்து முதலமைச்சர் 8 ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசிக்கவுள்ளார்.

மருத்துவமனை கட்டமைப்புகள், தனி வார்டுகள் என இருந்தாலும் மேலும் மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவது,  அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள்  குறித்தும் கூட்டத்தில்  விவாதிக்கப்படவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments