முகப்புசெய்திகள்இந்தியாகொரோனாவுக்கு தடுப்பூசி: ரஷியா சாதனை!

கொரோனாவுக்கு தடுப்பூசி: ரஷியா சாதனை!

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ரஷியா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளை முடித்து, அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற கட்டத்தை அடைந்துள்ளது. 

இதன்படி, ரஷிய ராணுவத்தில் உள்ள 50 அதிகாரிகள் (தன்னார்வலர்கள்) இந்த பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் கூறுகையில், “ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிப்பதற்காக 5 பெண்கள் உள்ளிட்ட 50 ராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments