முகப்புசெய்திகள்காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ௯ம் தேதி ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ரிஷப் பன்ட்டிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து நடைபெற்ற ௩ போட்டிகளில் பன்ட் பங்கேற்கவில்லை. காலில் ஏற்பட்ட காயத்திற்கு ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக அணி கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் காயம் குணம் அடைந்து விட்டதால், துபாயில் நடக்கும் ஐ.பி.எல் இன்றைய போட்டியில் டில்லி – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டில்லி அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும் விதமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் இன்று விளையாடுகிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments