முகப்பு மரு‌த்துவ‌ம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி, இஞ்சி, எலுமிச்சை, நெல்லிக்காய்!

நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி, இஞ்சி, எலுமிச்சை, நெல்லிக்காய்!

கொரோனா வைரஸ்… யாருக்கும் வரலாம், எந்த வழியிலும் வரலாம். நமக்கு வராமலிருக்க வேண்டுமானால் தனிநபர் இடைவெளி, கைகளைக் கழுவுவது, முகக்கவசம் அணிவது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது பொதுவான ஓர் அறிவுரை. ஆனால், அவற்றையும் மீறி நோய் பரவிக்கொண்டிருக்கிறது. திருடனைப்போல இந்த கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது. நோயை எப்படிக் குணப்படுத்துவது, மக்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது அரசு.


அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளில் இந்நோயின் தாக்கம் அதிகமிருந்தாலும் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இயற்கைச் சூழல், கலாசாரம், பண்பாடு போன்றவற்றையும் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதை மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவர்கள் மற்றும் ஏதாவது நலக்குறைவு உள்ள வயது முதிர்ந்தவர்களையே இந்த கொரோனா வைரஸ் தாக்குகிறது. ஆகவே, நம்மைத் தாக்காமலிருக்க வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் போதும். அதற்கு பாரம்பரிய மூலிகைகளை கொதிநீராகவோ (கசாயம்) அல்லது வடிசாறு (ஜூஸ்) வடிவிலோ அருந்தி வருவதன்மூலம் நம்மை நாமே காத்துக்கொள்ளலாம்.


சீந்தில் கொடி என்ற ஒரு மூலிகை உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ள இந்த மூலிகைக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி என பல பெயர்கள் உண்டு. கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் செழித்து வளரக்கூடியது. உதாரணமாக சென்னையில் பரவலாகக் காணப்படுகிறது. இந்த சீந்தில்கொடியின் இலை அல்லது தண்டுப்பகுதி 50 கிராம் எடுத்துக் கொண்டு அதனுடன் 5 மிளகு, அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து தினமும் குடிக்கலாம். அல்லது சீந்தில் கொடியின் இலை அல்லது தண்டுப்பகுதியுடன் வேப்ப இலை அல்லது குச்சி, மிளகு, கிராம்பு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். இப்படி அருந்துவதன்மூலம் எந்தவகையான காய்ச்சலும் நம்மை விட்டு விலகும். குறிப்பாக இன்றைய சூழலில் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் கொடிய வகை ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காக்கும். இந்தக் கசாயத்தை காலை, மாலை என மூன்று நாள் குடித்து வந்தாலே பாதிப்பு முற்றிலும் விலகும்.


பொதுவாக வேறு சில பாதிப்புகளுக்கும் இந்த சீந்தில் கொடி நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. நன்றாக முற்றிய சீந்தில் கொடி – 35 கிராம் அளவு (நன்றாக இடித்தது), கொத்தமல்லி (தனியா), சுக்கு – தலா 20 கிராம், அதிமதுரம், சோம்பு (பெருஞ்சீரகம்) – தலா 10 கிராம் எடுத்து இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை இருவேளை மூன்று நாட்கள் குடித்து வந்தால் செரிமானக்கோளாறு, வயிறு உப்புசம், நாள்பட்ட வாதம், பலக்குறைவு போன்றவை சரியாகும்.


அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் நம் ஊரைப்போல துளசி, இஞ்சி, மிளகு, மஞ்சள், எலுமிச்சை, வேப்பிலை போன்றவற்றை உண்ணக்கூடியவர்கள் அல்ல. ஏன், நம்மூரிலும்கூட சித்த மருத்துவ எதிர்ப்பாளர்கள் மற்றும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதா என்று வியாக்கியானம் பேசுபவர்களும்கூட இந்த இஞ்சி, மிளகை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனாலும் இந்த எதிர்ப்பாளர்கள் உண்ணும் உணவில் அவர்களையும் அறியாமல் இஞ்சியும், மிளகும் சேர்ந்திருக்கும். அவைதான் அவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.


பொதுவாக கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதுகுறித்து இதுவரை யாருக்கும் எந்தத் தெளிவும் இல்லை. அதிக வெப்பத்தில் நோய்க்கிருமிகள் செத்துவிடும் என்றார்கள். அதன்பிறகு அப்படியெல்லாம் இல்லை என்கிறார்கள். தொண்டையில் சென்றுவிட்டாலும் வெந்நீர் குடித்தால் அது நேரடியாக வயிற்றுக்குள் சென்று செயலிழந்துவிடும் என்றார்கள். அதேபோல் மூலிகைகளை கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் அவை செயலிழந்துவிடும் என்றார்கள். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது மறுத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சோப்பு போட்டு கைகழுவினால் அந்தக் கிருமி செத்துவிடும் என்று சொல்பவர்கள் மஞ்சள், வேப்பிலை கரைசலில் சாகாது என்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் இதுகுறித்து ஆய்வு ஏதும் நடத்தினார்களா? என்பது உலகுக்கே வெளிச்சம்.


நம் நாட்டில் பொதுவாக இயற்கை வழிகளில் பல்வேறு முறைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் உள்ளன. அவற்றை கடைபிடிக்காததாலேயே சிலர் நோய்களில் சிக்குண்டு அவதிப்படுகிறார்கள். ஆகவே, நம் பாரம்பரிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே எந்தவித நோய்களையும் எதிர்த்து நிற்கலாம். நோய் நம்மை நெருங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். நாம் உண்ணும் உணவுமுறையை திட்டமிட்டு அமைத்துக்கொண்டாலே எந்த நோயும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஆரஞ்சுப்பழம் தலைவலி, காய்ச்சல் குறிப்பாக டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதேபோல் டி.பி, தொண்டைப்புண், தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கும் நல்ல பலன் தரும். உடலில் உப்புத்தன்மை அதிகமாக நச்சுத்தன்மை அதிகரிக்கும்போது சமநிலைப்படுத்தக்கூடியது. நோய்க்கிருமிகளை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் படைத்தது. ஆரஞ்சு பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தினால் ஜலதோஷம் குணமாகும். இதேபோல் சளி, ஆஸ்துமா, காச நோய், தொண்டைப்புண் வந்தால் 125 மில்லி ஆரஞ்சுச்சாற்றுடன் தேன், உப்பு சேர்த்து அருந்தினால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் சரியாகும்.

எம்.மரிய பெல்சின்

ஆரஞ்சுப் பழத்தின் தோலுக்கும் மருத்துவக்குணங்கள் அதிகம் உண்டு என்பதால், அதன் அடிப்படையில் ஆரஞ்சு பழத்தோலில் ரசம் செய்து அருந்தலாம். கடுகு உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பெருங்காயம் சேர்த்து தாளித்து ஆரஞ்சுப்பழத்தோலைச் சேர்த்து வதக்கியதும் மஞ்சள்தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்தால் வித்தியாசமான ஆரஞ்சுப் பழத்தோல் ரசம் தயார்.  வேறொரு முறையிலும் ரசம் செய்யலாம். முதலில் எண்ணெய் ஊற்றி கடுகு,காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் இரண்டு பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதன்பிறகு வேக வைத்த பருப்புத்தண்ணீர், ரசப்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நுரை வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும். சூடு லேசாக ஆறியதும் கால் கப் ஆரஞ்சு ஜூஸ், கால் டீஸ்பூன் ஆரஞ்சுத்தோல் சேர்த்தால் அருமையான ஆரஞ்சு ரசம் தயாராகிவிடும்.


இதேபோல் வல்லாரைக் கீரையில் துவையல் அல்லது சட்னி செய்து சாப்பிடுவது ரத்தசோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றைப் போக்கும். டி.பி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மருத்துவக் குணம் நிறைந்த இந்த வல்லாரையுடன் உளுந்து, தேங்காய், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து லேசாக வதக்கி உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான வல்லாரைத்துவையல் தயார்.

பொது மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதி இல்லாததால் பலர் நமது பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். பல வீடுகளில் இஞ்சி, மிளகு, துளசி, தூதுவளை, எலுமிச்சை, நெல்லிக்காய் என கிடைப்பதைக் கொண்டு கசாயம், ஜூஸ் வைத்துக் குடிக்கிறார்கள். சாதி, மதம் வித்தியாசம் இல்லாமல் வீடுகளின் முன் வேப்பிலையை செருகி வைத்திருக்கிறார்கள். வேப்பம்பூ பூக்கும் காலம் என்பதால் அந்தப் பூவில் ரசம், துவையல் என செய்து சாப்பிடுகிறார்கள். இஞ்சி டீ, சுக்கு மல்லி வெந்நீர் தயாரித்து அருந்துகிறார்கள்.


விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் சுவாசம் எளிதாகும். மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்குச்சளி போன்ற பிரச்சினைகள் சரியாகும். ஆடாதொடை கசாயம் அருந்தினால் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளும் சரியாகும். துளசி, தூதுவளை, ஓமவல்லி போன்ற மூலிகைச்செடிகள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளைக் குணப்படுத்தும். தூதுவளை இலை, பூ போன்றவை ஆஸ்துமாவைக் குணப்படுத்தும். வெள்ளைப்பூண்டும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை சரிப்படுத்தும். இரவு தூங்குவதற்கு முன் 10 வெள்ளைப்பூண்டு பற்களை தோலுரித்து பாலில் வேக வைத்து தலா ஒரு சிட்டிகை மிளகுத்தூள், மஞ்சள்தூள் மற்றும் பனங்கல்கண்டு சேர்த்துக் கடைந்து குடிக்கலாம். இதன்மூலம் நெஞ்சுச்சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா தொந்தரவுகளும் சரியாகும். பகல் உணவில் தலா நான்கு துளசி இலை, வில்வ இலை, மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலும் ஆஸ்துமா தொந்தரவு இருக்காது.


இது வெயில் காலம் என்பதால் ஒரேயடியாக இந்த மருத்துவத்தை செய்ய வேண்டும். உடல் சூடு அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப இளநீர், தர்பூசணி, கிர்ணிப்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றைச் சாப்பிடுங்கள். நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. சளி, காய்ச்சல் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வதுடன் அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய மருத்துவம் எடுத்துக் கொண்டால் கொரோனா என்றில்லை எந்த நோய்களையும் வெல்லலாம்.


– எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments