முகப்புசெய்திகள்தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து இணையம் வாயிலாக அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அபராதம் விதித்து குறுந்தகவல் காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர் இதனால் பலருக்கு தாங்கள் எந்த இடத்தில் என்ன தவறு செய்தோம் என்பதே தெரியாமல் உள்ளது

இந்நிலையில் திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் ஆட்டோ ஓட்டுனர் கடந்த 6ம் தேதி திருச்சி தில்லைநகர் வழியாக பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார் அப்போது இவரின் செல்போனுக்கு திருச்சி மாநகர காவல் துறையிலிருந்து ஒரு குறுந்தகவல் கிடைத்துள்ளது

அதில் தலைக்கவசம் அணியாத காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார்

இந்த சம்பவம் ஆட்டோ ஓட்டுனர் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்துவது இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் விஜயகுமார் புகார் மனு அளித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments