முகப்புசெய்திகள்எஸ்.பி.ஐ டெபாசிட் மிஷினில் பணம் எடுப்பதற்கு தடை; எஸ்.பி.ஐ!

எஸ்.பி.ஐ டெபாசிட் மிஷினில் பணம் எடுப்பதற்கு தடை; எஸ்.பி.ஐ!

நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியில் உள்ள பண டெபாசிட் உடன் கூடிய ஏ.டி.எம்.. இயந்திரங்கள் தற்காலிகமாக செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கைவரிசை காட்டிய ஹரியானாவைச் சேர்ந்த நூதன கொள்ளையர்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் டெபாசிட் உடன் கூடிய ஏ.டி.எம். இயந்திரங்களையே குறிவைத்துள்ளனர்.

இந்த வகை மெஷினில் மட்டுமே பணம் எடுக்கும் இடம் அருகே ஒரு சிறிய சென்சார் உள்ளது. இதனை 20 நொடிகள் மறைத்து தான் அவர்கள் கொள்ளை செயலில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கொள்ளையடிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சென்னைக்கு வந்து லாட்ஜில் தங்கி ஏடி.எம்மை நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் 20ஆம் தேதி சென்னை முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.

கொள்ளையர்கள் ஹரியானாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை விரைந்துள்ளனர். இதே பாணியில் மற்ற மாநிலங்களில் குற்றம் நடந்துள்ளதா என விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து எஸ்.பி.ஐ ஏடி.எம். இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments