முகப்புசினிமா விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். 

இச்சம்பவம் டி.வி. விவாத மேடைகள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. இந்நிலையில் படத்தில் இருந்து விலகுங்கள் என்று கிரிக்கெட் வீரர் முரளிதரன், நடிகர் விஜய்சேதுபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் ரித்திக் என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் பாலியில் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திமுக எம்.பி. கனிமொழி விடுத்துள்ள செய்தியில், விஜய் சேதுபதி மகளுக்கு விடுத்த பாலியல் ரீதியிலான மிரட்டல் காட்டுமிராண்டித்தனமான செயல் மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட என்று கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரன் பௌலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐதராபாத் சன்ரைஸ் அணியின் உரிமையாளர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அது தமிழ் ஆர்வலர் கண்களுக்கு தெரியவில்லை. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments