முகப்பு அரசியல் மீண்டும் உடல் நல குறைவு: மருத்துவமனையில் விஜயகாந்த்!

மீண்டும் உடல் நல குறைவு: மருத்துவமனையில் விஜயகாந்த்!

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக போருரில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனையடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் விஜயகாந்திற்கு திடீர் என உடல் நலகுறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. நிர்வாகி கூறுகையில், விஜயகாந்த் 2-ம் கட்ட கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வரும் வதந்திகளை மக்களும், தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments