இணைய பயன்பாட்டால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவது போல் தீமைகளுக்கும் பஞ்சமில்லை. மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வதற்கான விஷயங்களும் அதில் நிறைந்து இருக்கின்றன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 12ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிலாரியாகஞ்ச் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து மர்மநபர் ஒருவரால் ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்நிலையத்தை அணுகினார்.

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, ஆசிரியரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்தவரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்துள்ளனர். ஆக்ராவை சேர்ந்த 20 வயதான சாகர் சிங் என்பவரின் பெயரில் செல்போன் எண் பதிவாகியிருந்தது, இதனையடுத்து இளைஞரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.
ஒரு கட்டத்தில் இதில் எப்படி ஹேக் செய்யலாம் என சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுக்குமாறு இளைஞருக்கு Dare கொடுத்துள்ளனர்.
அதனால்தான் வங்கிக் கணக்கை ஹேக் செய்ததாக இளைஞர் ஒப்புக் கொண்டுள்ளார். மக்கள் தங்கள் ஹேக்கிங் திறமையை பயன்படுத்தி எவ்வாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என அந்த விளையாட்டில் கற்றுக் கொடுத்ததாக இளைஞர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் கேமிங் கும்பல் இளைஞர்களை குறிவைப்பதாகவும், அதனால் பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கால் வீட்டிலேயே இருந்த இளைஞர், சர்வதேச ஆன்லைன் டேர் கேம் (Online Dare Game) ஒன்றை விளையாட ஆரம்பித்துள்ளார். அதில் கட்டளையிடப்படுபவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்பது தான் இந்த விளையாட்டு.