முகப்புசெய்திகள்தென்காசி: ஏரி குளங்களில் தடைசெய்யப்பட்ட மீன்கள் வளர்ப்பு; அதிகாரிகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு!

தென்காசி: ஏரி குளங்களில் தடைசெய்யப்பட்ட மீன்கள் வளர்ப்பு; அதிகாரிகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு!

தென்காசி மாவட்டம் வி கே புதூர் அருகே உள்ள எரட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது

தமிழகத்திலுள்ள குளங்கள் கண்மாய்கள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தேங்கும் தண்ணீரை வைத்துதான் விவசாயம் செய்கின்றனர் அத்துடன் அந்த பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இதுபோன்ற குளங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கா கெளுத்தி மீன் வளர்க்கப்படுகின்றன. வி கே புதூர் அருகே உள்ள குளத்திலும் ஆப்பிரிக்க மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த மீன்களால் நம் பாரம்பரிய மீன்களை அவை கொன்றுவிடும். அத்துடன் அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடுவதால் பலவித பக்கவிளைவுகள் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு ஆப்பிரிக்க மீன்களை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகள் தனியார் மூலம் வளர்க்க தடை தடை செய்யப்பட்டது. ஆனாலும் இந்த தடையை மீறி ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை இறக்குமதி செய்து கண்மாய் குளங்களில் மீன் வளர்த்து வருகின்றனர்.

இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஏரி குளம் கண்மாய்களில் வளர்க்கப்படும் மீன்களை ஏலம் விடும்போது தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன், பொய் மீன், பூ விரால் உள்ளிட மீன்களை வளர்ப்பதற்கான தடையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கு குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, அவகாசம் அளிக்கும்படி அரசு வழக்கறிஞர் கோரினார். இதுகுறித்து பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் தென்காசி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

1 கருத்து

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments