நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் பேனர் மற்றும் பால் அபிஷேகம் செய்து, புதுச்சேரி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன. நகர பகுதியில் நடமாடும் டிவியில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரங்களை வெளியிட்டனர்.
இந்நிலையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர், தலைவர் வசந்தராஜா தலைமையில் கிளை மன்றம் தலைவர் கில்லி செல்வா மற்றும் நிர்வாகிகள் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.