முகப்புஅரசியல்ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கக் கூடாது; ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கக் கூடாது; ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!

ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழக அரசு கலைக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளதைப் பார்க்கும்போது ‘அழிப்பது சுலம் ஆக்குவது கடினம்’ என்ற பழமொழிதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

கட்டமைப்பு இல்லாமை, பணியாளர்கள் இல்லாமை, நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் இல்லாமை, வெளிப்படைத் தன்மை இல்லாமை, நிதிச்சுமை ஆகியவற்றை காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு அதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைப்பது என்பது காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை காலதாமதாக்கும் செயலாகும்.

லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கும்போது அங்கும் பணியாளர் பற்றாக்குறை, கட்டமைப்பின்மை போன்ற பிரச்னைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் தேர்வு வாரியம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது என்பதற்காகவே கலைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால், அவற்றை முற்றிலும் போக்கி, வாரியம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments