முகப்புஅரசியல்கொரோனா: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்; டெல்லி முதல்வர்!

கொரோனா: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்; டெல்லி முதல்வர்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் முழு ஊரடங்கு காரணமாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே நேரம், கொரோனாவுக்கு நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர், கொரோனாவால் இறந்துவிட்டால், மாதம்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments