முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவிப்பதோடு அப்படி வர மறுத்தால் உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சி அடைய விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து பள்ளிமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்ததாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
பள்ளி ஆசிரியரை ஒருவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏடிஎஸ்பி லயோலா இக்னோசியஸ், முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.