முகப்புஆன்மிகம் நலம் பல அருளும் பாதிரிக்குப்பம் நவகாளியம்மன்!

நலம் பல அருளும் பாதிரிக்குப்பம் நவகாளியம்மன்!

கடலூர் மாவட்டம் ‘பாதிரிக்குப்பம்’ என்ற ஊரில் பிரசித்திபெற்ற நவகாளியம்மன் கோயில் அமைந் துள்ளது. புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருப் திருத்தலமான திருவந்திபுரம் பாதிரிப்புலியூர், வைணவத் 1. இவற்றிற்கு மத்தியில் பாதிரிக்குப்பம் அமைந்துள்ளது.

முற்காலத்தில் பாதிரி மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்த ஊர் ‘பாதிரிக்குப்பம்’ என பெயர் பெற்றது. இங்கு, அண்ட சராசரங்களையும் ஆக்கி அழித்து மறைந்து அருளும் பரம்பொருளாகிய அன்னை நவகாளி, 9 ரூபம் கொண்ட நவசக்தியாக காலம் கடந்து, கலை கடந்து, நிலை கடந்து, கருணாதீத ஞானம் கடந்து நிர்மல வேணியாக அருளாட்சி செய்கிறாள்.

தல வரலாறு:

பழங்காலத்தில் ‘நாகராஜன்’ என்ற மன்னனின் பக்தியை மெச்சிய சிவன், ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டபோது, ‘அன்னை பார்வதியே எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான் மன்னன். இதையடுத்து, பார்வதி உள்ளிட்ட எட்டு அம்சங்களும் தாமரைத் தடாகத்தில் குழந்தைகளாகப் பிறந்தன. எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக்கித் தருமாறு மன்னன் கேட்க… அவனுடைய எதிர்பார்ப்பு நிறை வேறியது.

கயிலாயத்தில் பார்வதி அம்பிகை சிவபெருமானின் சாபத்தினால் பூலோகத்தில் அந்த மன்னனுக்கே மகளாகப் பிறந்தாள். அந்தப் பெண் குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள்.

மன்னன் மகள் என்று அல்லாமல் அவளது சொல்லும் செயலும் ஈசனின் திருவடிகளையே எண்ணி இருந்தது. மக்கள் அனைவரும் அப்பெண்ணை தெய்வ கன்னி யாகவே பார்த்தார்கள். அப்பெண் பாதிரி மரங்கள் நிறைந்த வனம் ஒன்றில் ஈசனின் திருவடிகளை எண்ணி தவம் செய்யத் துவங்கினாள். அவளது தவ வலிமை யினால், அத்திருவடிகளே அவளை தான் யார் என்பதை உணரச் செய்தது. அவளே நவகாளியம்பிகை ஆவாள்.

அசுர சக்திகளை ஒடுக்க முத்தாலம்மன்,உலகம்மாள், இகழ்த்தியம்மாள், அங்காளி, ராஜராஜேஸ்வரி, துர்க்கை, பத்ரகாளி, நாகம்மாள், பார்வதி ஆகிய நவசக்திகளும் ஒன்று சேர்ந்தவளே நவகாளியம்பிகை.

ஆலய அமைப்பு:

இக்கோயில் வடக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. திருமகளையும், கலைமகளையும், இரு விழிகளாகக் கொண்ட அன்னை நவகாளியம்பிகை சிங்கத்தின் மீது அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள். அன்னை அருகில் ஸ்ரீ சக்கரம், இங்கு வரும் பக்தர்கள் எளிதாக தரிசிக்கக்கூடிய நிலையில் நிறுவப் பட்டுள்ளது.

கோயிலின் பிராகாரங்களில் அன்னை நவகாளி யம்பிகையுடன் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், அக்னி வீரன், பொம்மி, பாவாடைராயன், பத்ரகாளி, அங்காளம்மன் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த தெய்வங்களில் பத்ரகாளி அம்மனின் உருவம் பிரம்மாண்டமானது. 17 அடி உயரத்தில் கிழக்கு முகமாக அவள் அருள்புரிகிறாள்.

அன்னையின் தரிசனம்

நவகாளியம்பிகை கர்ப்பகிரகத்தில் உடுக்கை, சூலம், கரும்பு. அங்குசபாசம் ஏந்தி சிங்கத்தின் மீது அழகுற அமர்ந்திருக்கிறாள். உலகத்திலேயே எங்கும் காண முடியாத வழிபாடாக இக்கோயிலில் நவகாளியம்பிகை மானுட ரூபம் தாங்கி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தன் நாவினை அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி திதிகளில் வாளினால் அறுத்து உதிரம் சிந்தும் வழிபாடு இக்கோயிலுக்கே உரிய தனிப்பெரும் வழிபாடாகும்.

இந்த வழிபாட்டு முறைக்கு புராணங்கள் கூறும் காரணம்… க்ப்படல்டாபலும்ம்

“செருந்துணை நாயனார்’ என்கிற அன்பர், தான் சிவபூஜைக்காக வைத்திருந்த மணம் மிகுந்த மலரை தன் மனைவியான செம்பியன் மாதேவியர் தன் மூக்கினால் முகர்ந்ததைக் கண்ட நாயனார் மனைவி தேவியர் என்றும் பாராமல் தன் மனைவியர் மூக்கை அறுத்தது… சண்டிகேஸ்வரப் பெருமாள் தான் சிவபூஜைக்காக வைத்திருந்த பாலினை தன் தகப்பனார் கால் உதைத்து கீழே கொட்டியதால் தந்தை என்றும் பாராமல் அவர் காலினை அரிவாளால் வெட்டியது…

இறைவனுக்கு தன் கண்ணையே கத்தியால் எடுத்து கண் பொருத்திய கண்ணப்ப நாயனார்… இறைவன் விரும்பிக் கேட்டதற்காக தன் ஒரே மகனை சமைத்துக் கொடுத்த சிறுத்தொண்ட நாயனார்…

இப்படி இறைவனை மகிழ்விப்பதற்காக பல வழிபாடுகள் முற்காலத்தில் நடத்தப்பட்டுள்ளன. இந்த வகையில், இந்த கலியுகத்தில் நாம் படும் துன்பங்களுக்கு முக்கிய காரணமாக விளங்குவது நாக்கு என்பதால் அதைஅறுத்து உதிரம் சித்தும் வழிபாடு இங்கு நடத்தப் படுகிறது.

திதி வழிபாடு

இக்கோயிலில் நவகாளியம்பிகை பவுர்ணமி திதியில் சிவந்த நிற வக்ர காளியாகவும், தேய்பிறை திதியில் கருமை நிற கருங்காளியாகவும். வளர்பிறை திதியில் வெண்ணிற துர்க்காவாகவும், அமாவாசையில் மஞ்சள் நிற அங்காளியாகவும் அருள்கிறாள். அந்த நாட்களில் நாவறுத்து உதிரம் கருகி ஆராதனை ஏற்கிறாள். அம்பிகையின் திதி வழிபாட்டின் பயன்

ஒரு மனிதனின் மனோ பலமானது தானாக சிந்தித்து தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி வரும் மாற்றங்களே நிரந்தர மனமாற்றமாக அமையும். அந்த மனிதன் சிந்திக்க மறக்கிறாள் என்று சொன்னால் அவன் ஆசைக்கு அடிமையாகிறான். அந்த ஆசையே மனிதனின் எண்ணற்ற துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது. அந்த ஆசைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஞானமார்க்கத்திலும், பக்தி மார்க்கத்திலும் மட்டுமே மனப் பக்குவத்தைக் கொண்டு வர முடியும்.

அப்படிப்பட்ட மனப் பக்குவத்தையே மனித சிந்தனையில் கொண்டு வர நவகாளியம்பிகை மானுட ரூபம் கொண்டு நாவால் உதிர பலியிட்டு, அந்த உதிரத்தை தீயினால் கருகச் செய்கிறாள். அந்த அற்புதத்தை பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதிகளில் இங்கு காணும்போது மனத் துன்பம். நோய் மற்றும் தடைகள் எதுவாகினும் தீர்த்து விடுகின்றன.

ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் இக்கோயிலில் ராகு கால பூஜை நடைபெறுகிறது. துயரங்களாலும், நோய்களாலும் துன்பப்படு பவர்கள் நவகாளியம்பிகையின் பெயரை 21 முறை, 51 முறை, 108 முறை எழுத்து வடிவங்களாக்கி மாலை தொடுத்து, மூன்று எண்ணெய் கலந்து 21 வாரங்கள் தீபம் ஏற்றினால் அவை தீரும் என்கிறார்கள்.

திருவிழாக்கள்

இப்கோயிலின் முக்கிய திருவிழா புரட்டாசி மாதம் நடைபெறுகிறது. அந்த மாதத்தில் வரும் நவராத்திரிப் பெருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங் காரத்தில் காட்சி தருகிறாள் நவகாளியம்பிகை. மயானக் கொள்ளை விழாவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments