நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நலமாக உள்ளார் என்று மருததுவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணி அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மியாட் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த், மருத்தவ அறிக்கை வெளியாகதாதால் பல்வேறு விதமான தகவல்கள் வேகமாகப் பரவியது.
இந்நிலையில் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் விஜயகாந்த். பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம், என்று கூறப்பட்டுள்ளது.