தமிழக முதல்வரின் டிகாரோனா நிவாரண நிதியாக, நடிகர் நெப்போலியன் ரூபாய் 25 லட்சம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மிகத்தீவிரமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கொரோனா நிவாரண நிதியாக மக்கள் உதவி அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்காக வங்கி கணக்கு எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.பலரும் தங்களால் முடிந்த உதவியை தமிழக அரசுக்காக செய்து வருகின்றனர்.
தன்னார்வ நிறுவனங்கள், தமிழ் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், திரையுலக பிரபலங்கள், சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் சார்பில் 25 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
நெப்போலியன் சார்ப்பாக அவர் நிர்வகிக்கும் ஜீவன் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிட்டட் மற்றும் ஜீவன் அறக்கட்டளை சார்பாக சுரேஷ், அசோக், சீத்தாராமன் மற்றும் வசந்தி பாபு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர்.
கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.