திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பௌர்ணமி நாளான இன்று திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலையில் இன்று, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற 5-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அவர், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரும் நிலையில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கோயில் கோயிலாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலிலுக்கு துர்கா ஸ்டாலின் இன்று மாசிமாத பவுர்ணமியை ஒட்டி சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அவர் மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி, சனீஸ்வரன் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.