சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயதாஸ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சுதந்திர நகர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் சின்னதுரை, 60. அந்தோணி மகன் சுரேஷ், 34, சாமிநாதன் மகன் செல்வன், 47, சாமி மகன் தனசீலன், 56 ஆகிய 4 பேர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயதாஸ் வழக்கு பதிவு செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும் 520 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.