முகப்பு அரசியல் தொகுதி பங்கீடு; விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு!

தொகுதி பங்கீடு; விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்து உள்ளனர். பாமக உடன் கூட்டணி பங்கீடு உறுதிப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தேமுதிக உடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தீவிரவமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாமக எந்த தொகுதிகளில் போட்டியிடும் மற்றும் அதிமுக கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

இந்நிலைியல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments