முகப்பு அரசியல் சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது?

சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது?

0
5

தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அங்கம் வகித்த கூட்டணி கட்சிகளே தற்போதும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இதில் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி கூட்டணியில் இருந்து விலகி, சரத்குமாருடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்களை ஒதுக்கி, முதன் முதலில் தனது தொகுதி பங்கீட்டை அறிவித்தது.

2016ல் திமுக மட்டும் தனியாக 89 இடங்களை கைப்பற்றி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. ஆனால், வரும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் திமுக களமிறங்கியுள்ளது.

கடந்த வருடங்களாக ஆட்சியில்லாத திமுக, கொரோனா காலங்களில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியது. இதில் தொகுதி மக்களுக்கு, முன்னின்று நல உதவி திட்டங்களை செய்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:

இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடனும் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்