தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூபாய் 533 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதற்கட்டமாக 8 ஆயிரத்து 923 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஆயிரத்து 441 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 533 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.