பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு 27,397 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறி இருந்ததால், இன்று காலை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்கவில்லை.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.