முகப்பு செய்திகள் தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; சென்னைக்கு புதிய காவல் ஆணையர்!

தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; சென்னைக்கு புதிய காவல் ஆணையர்!

சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன், மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிரடி அதிகாரிகள் மாற்றத்தில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

குறிப்பாக சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே., விஸ்வநாதன், காவல் துறை செயலாக்கம் ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காவல்துறை செயலாக்க டிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையராக(தெற்கு) இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல ஐ.ஜி., யாக இருந்த அமல்ராஜ் சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராகவும்; சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராக இருந்த ஜெயராம் மத்திய மண்டல ஐ.ஜி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments