முகப்பு அரசியல் மீண்டும் ஆட்சி அமைப்போம்; பேரவையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

மீண்டும் ஆட்சி அமைப்போம்; பேரவையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

0
8

வரும் தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க சபதம் ஏற்றுள்ளதாக பேரவையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகத்தின், 15வது சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, துணை முதல்வர் பதிலுரைக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,  தான் பதவி ஏற்றதில் இருந்து இன்றுவரை நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், அரசுக்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் அரசு திட்டங்களை வேகமாகவும் துரிதமாகவும் செயல்படுத்திய அரசு துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

அதிமுக அட்சியில் விவசாய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி இடுபொருள் நிவாரணமாக வழங்கியது எனவும், வறட்சி காலத்திலும், வெள்ளம் வந்தபோதும் பருவமழை பொய்த்த போதும் வேளாண் மக்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியதும் அதிமுக அரசுதான் என தெரிவித்தார்.

தனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் ஆட்சி அமைக்கும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அவ்வகையில், வரும் சட்டமன்ற தேர்தலிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நனவாக்கும் விதமாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க சபதம் ஏற்றுள்ளதாக முதல்வர் பேரவையில் தெரிவித்தார்.

மேலும், கூட்டணியில் இடம்பெற்றள்ள கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்றார்.

இறுதி நாள் உரையில் முதல்வர் தனது நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு உறுதியாக இருந்தவர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்