முகப்பு செய்திகள் இந்தியா கொரோனா: மீண்டும் சவாலான சூழல்; பிரதமர் மோடி!

கொரோனா: மீண்டும் சவாலான சூழல்; பிரதமர் மோடி!

கொரோனா பரவல் நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது என பிரதமர் மோடி, மாநில முதல்வர்களிடம் நடந்த கலந்துரையாடலில் கூறினார்.

நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த (ஏப்.,4 தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கண்டறிதல் கண்காணிப்பு என்பதுசிறந்த வழியாக இருக்கும். கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள்.

இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளிகள் பற்றிய விரிவான தரவுகள் நம்மிடம் இருந்தால் அவை உயிர்களை காப்பாற்ற உதவும். நாம் முதலில் தடுப்பூசி இல்லாமல் கொரோனாவை எதிர்கொண்டோம் .இப்போது நம்மிடம் தடுப்பூசி உள்ளது.

இரவு நேர ஊரடங்கை இரவு 9மணி முதல் காலை 5 வரை அல்லது 6 மணி வரையில் அமல்படுத்தலாம். ஏப்.,11 ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம்.

கொரோான தடுப்பு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தி அதனை வெற்றி கொள்வோம். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டேன் கொரோனா வராது என அலட்சியமாக இருக்க கூடாது.

இவ்வாறு மோடி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments