முகப்பு செய்திகள் கொரோனா: மதுரையில் 18 தெருக்கள் மூடல்!

கொரோனா: மதுரையில் 18 தெருக்கள் மூடல்!

மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக, மதுரையில் உள்ள 18 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மதுரையிலும், தினசரி சராசரியாக 100 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து அதிகம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தெருக்களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் படிப்படியாக மூடி வருகின்றனர்.

தற்போது வரை திருப்பாலை, கேகே நகர், விளாங்குடி, வில்லாபுரம், பல்லவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 18 தெருக்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த தெருக்களில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது.

வெளியே இருந்து உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments