முகப்பு செய்திகள் ஐபிஎல்: முதல் முறையாக களமிறங்கும் சச்சின் மகன்!

ஐபிஎல்: முதல் முறையாக களமிறங்கும் சச்சின் மகன்!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரரும், கிரிக்கெட் மாஸ்டரின் மகனுமான  அர்ஜூன் டெண்டுல்கர் நாளை நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிகெட் போட்டியில் முதல் முறையாக களமிறங்க உள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் இடதுகை பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கரை நடப்பு சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் 20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட கடைசி வீரராவர். இளம் வீரரான அர்ஜூன் டெண்டுல்கர் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் மும்பை அணியில் அறிமுகமானார்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணம் செய்தார்.

இந்நிலையில், தற்போது அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றதற்கு ஒரு சிறந்த தொடக்ககால அனுபவமாக இருக்கும்.

மும்பை அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட், ஜாகீர் கான் போன்ற சிறப்பான அனுபவசாலிகளுடன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையில் நாளை நடைபெறும் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் அர்ஜூன் டெண்டுல்கர் அணியின் பயிற்சி ஆட்டத்தில் சேர்ந்துள்ளார்.

மும்பை அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற்றுள்ள அர்ஜூன் டெண்டுல்கர் அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, தவால் குல்கர்னி, ஆல்ரவுண்டர்கள் கீரோன் பொல்லார்ட் மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் ஓய்வெடுத்தால் மட்டுமே மாற்று வீரராக விளையாட அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments