அரியலுார் அருகே வைக்கோல் லாரி நடு வழியில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூரில் இருந்து ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் நரிக்குறவர் காலனிக்கு ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு சிலர் வந்தனர். லாரியை, மோகன்ராஜ் (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார்.
அந்த லாரி ஆத்தூர் ககுறவன் காலனி முட்டல் பிரிவு ரோடு அருகே வந்த போது, மேலே சென்ற மின் கம்பியின் மீது வைக்கோல் உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானது.
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், லாரி தப்பியது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.!