முகப்பு செய்திகள் இந்தியா மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 மணி நேர இரவு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தப்பட உள்ளதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.

அங்கு தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 5,000ஐ கடந்துள்ளது. மேலும் பாஸிட்டிவிட்டி ரேட் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

அத்துடன் ஒரே மாதத்தில் 6 அமைச்சர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் ஒரு அமைச்சருக்கு 2வது முறையாக தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த மகாராஷ்டிர அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் அம்மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வதேட்டிவார் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக கூறியிருக்கிறார்.

அமைச்சர் விஜய் வதேட்டிவார் கூறும்போது மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவும், இது தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அடுத்த வாரத்தில் ஆலோசித்து முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார்.

ஏற்கனவே சமீபத்தில் மும்பை மேயர் கிஷோரி பத்னேகர், பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற தவறினால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments