முகப்புசெய்திகள்வங்கக்கடலில் யாஸ் புயல்?

வங்கக்கடலில் யாஸ் புயல்?

வங்கக் கடலில் புதிய காற்றத்தழுத்த தாழ்வுமண்டலம் உருவாக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் கடந்த 17ம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த புயல் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன, வீடுகள் சேதமடைந்தன. புயல் சேதங்களை சரி செய்ய தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வங்கக் கடலில் புதிய புயலுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 23ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இது புயலாக வலுபெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, புயலாக வலுபெறும் பட்சத்தில் ஓமன் நாடு பரிந்துரைத்த யாஸ் என்னும் பெயர் புயலுக்கு சூட்டப்படும்.

மேற்குவங்கம் மற்றும் ஒடிசா கடற்கரையை இந்த புயல் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments