இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 சமநிலையில் உள்ளன. இதையடுத்து குஜராத்தில் உள்ள மொதீரா ஸ்டேடியத்தில் பிப்ரவரி 24ம் தேதி பகலிரவு போட்டி நடைபெற உள்ளது. இதில் பிங்க் நிற பந்து வீசப்படும்.
இதற்கான இந்திய அணியில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியை வெல்ல காரணமாக இருந்த ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். முதல் இரண்டு போட்டியில் இடம் பெற்ற ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு ஏதும் வழங்கப்படாத நிலையில் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது இந்திய அணி நிர்வாகம்.
மிகப்பிரமாதமான ஸ்டேடியம் இதற்கு முன்பு இங்கு ஹவ்டிமோடி நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பும், மோடியும் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:
விராட் கோலி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே, ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா, ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.