அரசியலில் தனக்கு ஆசை இல்லை என்று கலைமாமணி விருது பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார், சிவகார்த்திகேயன். அப்போது அவர் பேசியதாவது,
கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இன்னும் அதிகமான நல்ல படங்களை நடிக்க வேண்டும். அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் வேண்டும்.
தொடர்ந்து, மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும் ஆசை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், `அதற்கு ஆசை இல்லை… ஆனால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இன்னும் என்னுடைய திறமையை அதிகபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.