மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.