முகப்பு அரசியல் நெல்லையில் நயினார் நாகேந்திரன்; பா.ஜ., மாநில தலைவர் முருகன்!

நெல்லையில் நயினார் நாகேந்திரன்; பா.ஜ., மாநில தலைவர் முருகன்!

வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதை பாரதிய ஜனதா மாநில தலைவர் முருகன் உறுதிப்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் பா.ஜ.,போட்டியிடும் தொகுதிகளில் மாநில தலைவர் எல்.முருகன் நேரடியாக சென்று கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு, பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வருகிறார்.

திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.,மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதால், இன்று தச்சநல்லுாரில் இருந்து ஜங்ஷன் வரையிலும் 500 டூவீலர்களில் தொண்டர்கள் பங்கேற்ற பேரணியை துவக்கிவைத்தார்.

மேலும் பேசும்போது, 234 தொகுதிகளிலும் பா.ஜ.,தேர்தல் பணி துவக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம்.

வரும் 25ல் பிரதமர் மோடி கோவைவருகிறார். 28 ல் விழுப்புரத்தி்ற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். தமிழகத்தில் இரட்டை இலக்கு எண்ணிக்கையில் சட்டமன்றத்தில் பெறும் இலக்கில் உள்ளோம்.


கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும். தேர்தல் நெருங்கிவிட்டதால் மகளிர் அணி மாநாடு, விவசாய அணி மாநாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் தரப்படும்.

தமிழகத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு போதிய அளவு வந்துகொண்டுதான் இருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மையத்திற்கு வெளிமாநிலத்தில் இருந்து நிர்வாக இயக்குநர் நியமிக்கப்பட்டிருப்பது குறையாக பாரக்க வேண்டாம். நம்மவர்கள் மற்ற மாநிலங்களில் நியமிக்கப்படுகிறார்கள்.

திருநெல்வேலியில் பா.ஜ.,சார்பில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தச்சநல்லுார் வரம்தரும்பெருமாள் கோயிலில் பூஜையுடன் இருசக்கர வாகன பேரணி நடந்தது.

நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் வளாகத்தில் கட்சி தேர்தல் அலுவலகத்தை நேற்று மாநில தலைவர் எல்.முருகன் துவக்கிவைப்பதாக இருந்தது.


இருப்பினும் நேரம் சரியில்லை எனவும், அ.தி.மு.க.,உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தனியே போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியதால் அவர்களை அழைத்து இன்னொரு நாளில் கட்சி அலுவலகம் திறப்போம் எனவும் தெரிவித்தனர்.

திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.,சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதால் இருசக்கர வாகன பேரணியை மாநில தலைவர் எல்.முருகன் துவக்கிவைத்தார்.


திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.,வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கட்சி அலுவலக திறப்பு விழாவில் இருசக்கர வாகன பேரணியால் களைகட்டியது தொகுதி திருநெல்வேலியில் பா.ஜ.,வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments