முகப்பு ஆன்மிகம்  மதுரை சித்திரை திருவிழா; பக்தர்களுக்கு தடை!

மதுரை சித்திரை திருவிழா; பக்தர்களுக்கு தடை!

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போலவே பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் அதி தீவிரமாக கொரோனா பரவி வருவதால், ஆட்சியர் அன்பழகன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் ஆட்சியர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரையில் கொரோனா விதிமுறைகளை கண்காணிக்க பத்து சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர் மதுரையில் உள்ள பரவை, மாட்டுத்தாவணி காய்கறி வணிக வளாகத்தில் சில்லறை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தாண்டு சித்திரை திருவிழா 2020ஆம் ஆண்டை போலவே உள் திருவிழாவாக நடைபெரும் என்றும் கோயில் வளாகத்திற்கு உட்புறத்தில் சடங்கு, சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெறும் என்றார்.

திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை எனக் கூறினார். மதுரை சித்திரை திருவிழா வரும் எப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments