முகப்பு அரசியல் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சை பேச்சு; உதயநிதிக்கு, தேர்தல் ஆணையம் கோரிக்கை!

அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சை பேச்சு; உதயநிதிக்கு, தேர்தல் ஆணையம் கோரிக்கை!

மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி குறித்த சர்ச்சை பேச்சு குறித்து, நேரில் விளக்கமளிக்குமாறு உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் எழுந்தன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்க்கு விளக்கமளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக தெரிவித்துள்ளார். 

சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மீது தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அவர்களது பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீது மரியாதை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நேரில் விரிவான விளக்கமளிக்க அனுமதிக்குமாறு உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments