முகப்புசெய்திகள்தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: ஜூன் 7ம் தேதி வரை நீட்டிப்பு; தமிழக அரசு!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: ஜூன் 7ம் தேதி வரை நீட்டிப்பு; தமிழக அரசு!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி தற்போது குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 34,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடந்தவாரம் திங்கள்கிழமையிலிருந்து அமலில் இருந்துவருகிறது. இந்தநிலையில், தற்போது மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 22-5-2021-ம் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரிதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 24-ம் தேதி தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-ம் தேதி காலை 6 மணி நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments