கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால், பட்டாசு படத்தின் கதாநாயகி மெஹ்ரீன் பிர்ஸாடாவின் திருமணம் தள்ளிப்போயிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மெஹ்ரின் பிர்ஜாடா. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்த ‘நோட்டா’, தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ ஆகியப் படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், ஹரியானாவின் காங்கிரஸ் பிரமுகர் பவ்யா பிஷ்னோயும் காதலித்து வந்தனர். ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் தான் இந்த பவ்யா பிஷ்னோய். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைப்பெற்றது. இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் மெஹ்ரீன்.
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் மெஹ்ரீன். அதோடு அவரது வருங்கால கணவர் பவ்யா பிஷ்னோய் மற்றும் அவரது குரும்பத்தினரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். தற்போது இரு குடும்பமும், தங்களை மாற்றி மாற்றி கவனித்துக் கொள்கிறார்கள்.