தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக்பாஸ் வின்னர் ஆரி பொதுமக்களுக்கு முகக்கவசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் 2314 பேர் இன்று நோய்த்தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 8,78571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பலி எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்திருப்பதாகவும், 9,33,434 ஆக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது, தடுப்பூசி முகாம் நடத்துவது என சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நடிகரும் பிக்பாஸ் வின்னருமான நடிகர் ஆரி கோவையில் பொதுமக்களுக்கு முக்கவசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரது இந்த முயற்சியை ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.