முகப்பு செய்திகள் தென் மாவட்டங்களுக்கு 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம்!

தென் மாவட்டங்களுக்கு 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம்!

தென் தமிழக மாவட்டங்களுக்கு நாளை முதல் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், நேற்று முன்தினம் பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவியது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. இந்த மழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக பெரியகுளம், பழனியில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments