யுகாதி பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வார சந்தையில், 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை வருகிறது. இதையடுத்து அதை கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வார சந்தைக்கு விற்பனைக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
இதில், 10 கிலோ எடை கொண்ட ஆடு, 7 ஆயிரம் ரூபாய் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு, 10 ஆயிரம் ரூபாய் வரையும், ஆட்டுக்கிடாய் அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
ஆடுகளை வாங்குவதற்காக, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகளும் வந்திருந்தனர்.
இந்த வார சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர். விலை கூடுதலாக விற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.