முகப்பு சினிமா  ஹீரோவாக அறிமுகமாகும் முரளியின் இரண்டாவது மகன்!

ஹீரோவாக அறிமுகமாகும் முரளியின் இரண்டாவது மகன்!

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அதர்வாவின் தம்பி ஆகாஷ்க்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளுமான சினேகா பிரிட்டோவுக்கும் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்த போது காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து 2019-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து ஆகாஷை ஹீரோவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பல முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் விஷ்ணுவர்தனின் கதை மிகவும் பிடித்திருப்பதால் அதில் ஆகாஷை ஹீரோவாக நடிக்க வைக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments