முகப்பு அரசியல் தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்; கமல்ஹாசன்!

தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்; கமல்ஹாசன்!

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக திமுகவில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், அது தலைமையிடம் இருந்து வர வேண்டும் என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடந்தது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘இன்று பசுமாட்டுக்கு கொடுக்கும் மரியாதை கூட மனிதனுக்கு அதுவும் தமிழனுக்கு கிடைப்பதில்லை. பிரதமரை சந்திக்க நேரம் பல முறை கேட்டும் கிடைக்கவில்லை.

கட்சியில் சேர்ந்து காவி துண்டு போட்டுக் கொள்ள அல்ல. மய்யம் என்பது கொள்கைப்பற்று என்று கூறிக்கொண்டு மக்களுக்கு நடக்கவிருக்கும் நல்லதை தடுக்கக் கூடாது. விட்டுக் கொடுத்தல் தானே அரசியல்.

நான் ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் சேவையாற்ற வேண்டும். அதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் உண்டு. இப்போது வயது 60 எனக்கு. சக்கர நாற்கலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் நான். அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி தான் பிக் பாஸ்.

தி.மு.க, அ.தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளனர். அவர்கள் நல்லப் பணி செய்து விட்டு மரியாதை இல்லாமல் உள்ளனர். அவர்களை மக்கள் நீதி மய்யத்தில் சேர அறைகூவல் விடுக்கிறேன்.

எம்.ஜி.ஆர் பத்து முறையாவது என் நெத்தியில் முத்தம் கொடுத்திருக்கிறார். நாம் ஆட்சி அமைத்தால் மத நல்லிணக்கம் தானாக நடக்கும். ஆனால் இன்றைய அரசியல் அப்படி இல்லை.

ஆட்சியில் இருக்கும்போதே முதல்வர் கைதாகும் வரலாறை ஏற்படுத்தியுள்ள கட்சி அ.தி.மு.க. இரட்டை இலை என்று எம்.ஜி.ஆர் காட்டியது இரண்டு பேருக்கு இலை போட்டு சாப்பிட என நினைத்துக் கொண்டார்கள் போலும்.

நான் சொல்வதையெல்லாம் முதல்வர் செய்கிறார் என மு.க.ஸ்டாலின் மகிழ்கிறார். சரி, டாஸ்மாக் மூட வேண்டும் என கூறுங்கள்.

கூவத்தூரில் இவர்தான் அவருக்கு ஊத்தி கொடுத்தார். அவர் தான் இவருக்கு ஊத்தி கொடுத்தார் என சர்ச்சை வந்தது. ஆனால் ஊருக்கே ஊத்திக் கொடுத்தவர்கள் இவர்கள். தி.மு.க, அ.தி.மு.கவும் ஒரே விசயத்தை தான் செய்கிறார்கள். இரு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. செய்வீர்களா என கேட்கவில்லை. செஞ்சுருங்க என கூறுகிறேன்.

நமக்கு நேரம் இல்லை. உங்களுக்கு வர வேண்டிய 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மூன்று ஆண்டுகள் முன் கூறினார்கள். பரவாயில்லை என்று அரசியலுக்கு வந்தேன். அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். மார்ச் 7ம் தேதி நடைபெறும் மாநாடு தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ரஜினிமாந்துடன் அரசியல் பேசவில்லை. அவர் வரவில்லை என்று கூறியவுடன் உடன் பணியாற்ற எப்படி அழைக்க முடியும்? சரியாக இருக்குமா? மூன்றாவது அணி மலரும் என்று தோன்றுகிறது.

தி.மு.கவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தூது விடுவதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது. தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்’ என்று தெரிவித்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments