முகப்புஅரசியல்மத்திய அமைச்சரவை விரிவாக்கம்; ஓ.பி.எஸ் மகனுக்கு வாய்ப்பா?

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்; ஓ.பி.எஸ் மகனுக்கு வாய்ப்பா?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அதிமுக எம்.எம்.பியும், ஓ.பி.எஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்துவருகிறது. மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி பா.ஜ.க இணைந்து போட்டியிட்டது.

அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்தது. அதேநேரத்தில் தேசிய அளவில் பா.ஜ.க கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.

தமிழகத்திலிருந்து அ.தி.மு.கவைச் சேர்ந்த ரவீந்திரநாத் மட்டும் அக்கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தார். எனவே, அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அப்போதே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை.

அதனால், தமிழகத்தைச் சேர்ந்த யாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறாத சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிகிறது. அப்போது, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதில், காங்கிரஸிலிருந்து பா.ஜ.கவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் மாநில முன்னாள் முதல்வர் சர்வானந்த் சோனாவால், பீகார் மாநில பா.ஜ.க மூத்த தலைவர் சுஷில் மோடி, ஜெய்பாண்டா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments