முகப்பு செய்திகள் பெட்ரோல் - டீசல் பங்குகளில் முகக்கவசம் கட்டாயம்!

பெட்ரோல் – டீசல் பங்குகளில் முகக்கவசம் கட்டாயம்!

பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு வரும் வடிகையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவ தொடங்கிய 06.07.2020 அன்று முதல் அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால், வருகின்ற 10.04. 2021 முதல் மீண்டும் முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாட்டு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments