நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சைத்ரா கூட்டூர், தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பினாயில் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற சைத்ராவை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகையும் முன்னாள் பிக் பாஸ் கன்னட போட்டியாளருமான சைத்ரா, அண்மையில் மண்டியாவைச் சேர்ந்த நாகர்ஜூன் என்ற தொழிலதிபரை மணந்தார். இருப்பினும், கணவரின் குடும்பத்தினர் தங்கள் திருமணத்தை ஏற்க மறுத்ததால், சைத்ரா ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாங்கள் இதுவரை நாகர்ஜூனின் தரப்பிலிருந்து எதுவும் கேட்கவில்லை. சிக்கலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக நேற்று ஏ.சி.பி அலுவலகத்திற்கு நாங்கள் செல்லவிருந்தோம்.
ஆனால், சைத்ரா இப்படியோரு முடிவை எடுத்ததால், எங்களால் போக முடியவில்லை. அவர் இயல்பு நிலைக்கு வந்தவுடன், சரியான முடிவுகளை எடுப்போம் என்றார்.