நோய் ஏற்படுவதற்கு உடலிலுள்ள கழிவுகளே முக்கிய காரணம் .
அதிலும் சிறுநீர் சரியாக வெளியேறாவிட்டால் உடலின் பித்தம் அதிகமாகி மன அழுத்த நோய்களை உண்டாக்கும்.
தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது,
நமது உடலின் வியர்வைச் சுரப்பிகளின் செல்பாடு நன்றாக இருந்தால்தான்
பித்த தோஷத்தை சமன் செய்து வெப்பு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
பஞ்ச பூதத்தில் நீரின் செல்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம்.
நீர் கழிவு சரியாக வெளியேறாவிடில், ஜலதோஷம், சைனஸ், சூட்டு ஆஸ்துமா ,அம்மை, சூட்டுக் கட்டிகள், வெப்புநோய்கள் போன்றவை உண்டாகலாம்..
மேலும் நீர் கழிவு சரியாக வெளியேறாவிடில் வியர்வையில் நாற்றம் உண்டாகும்.
இந்த வியர்வை நாற்றத்தைப்போக்க உதவும் முக்கியமான ஒரு மருத்துவ முத்திரைதான் “சுகந்த முத்திரை”.
நாற்றமடிக்கும் உடலை மணக்கச்செய்யும் முத்திரை என இந்த முத்திரை பற்றிய செய்திகள் சித்தர் பாடல்களில் காணக்கிடைக்கிறது.
“வேகாத மண்ணும் சுடும்பாரு
பாரே மயங்கிய மந்திர நீரு மடங்கித்தழையும் மற்றிரண்டும் சுகந்தமே சுந்தர தேகமாச்சு”
என குருமார்களால் போற்றப்பட்ட சுகந்த முத்திரையை பயிற்சி செய்வதால் கோடைகால வியர்வை துர்நாற்றம் குறைவதோடு உடலின் நீர்பூதக் குறைபாடுகளையும் சமன் செய்யமுடியும்.
இந்த சுகந்த முத்திரையை எப்படி செய்வது எனப்பார்ப்போமா?
கடைசி இரண்டு விரல்களையும் மடக்கி உள்ளங்கையில் ஊன்றவும்.
பெருவிரலின் நுனியை, மோதிர விரலின் பக்கவாட்டுப் பகுதியில் வைக்கவும்.
மற்ற இரண்டு விரல்களையும் இணைத்து பெருவிரலின் மேல் பதியவைத்து நுனிகளை நேராக நீட்டவும்.
எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் வருமே.
இந்த முத்திரையை வைத்துக்கொண்டு” தினமும் காலை, மாலை 2-3 நிமிடம் செய்யலாம்.