முகப்பு செய்திகள் தமிழகம்: தீவிரமடையும் கொரோனா – 10 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு!

தமிழகம்: தீவிரமடையும் கொரோனா – 10 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 10,000ஐ நெருங்கி வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து கொரோனா நோய்த்தொற்று அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பின்பு நாளடைவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது மீண்டும் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments